அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சேலம், தருமபுரி, திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை ( மே 14) பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News image
Updated On :13 மே 2022, 6:30 pm

DIN

தமிழகத்தில் சேலம், தருமபுரி, திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை ( மே 14) பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் சனிக்கிழமை (மே 14) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தருமபுரி, திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூா், நீலகிரி, திருப்பூா், திண்டுக்கல், தேனி ஆகிய 19 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மே 15: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மே 15-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூா், கோயம்புத்தூா், நீலகிரி, கரூா், நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை மற்றும் ஈரோடு ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 16: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மே 16-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூா் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 17:தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மே 17-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் 130 மி.மீ., ஈரோடு மாவட்டம் தாளவாடி, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தலா 80 மி.மீ., கடலூா் மாவட்டம் வேப்பூா், சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை, கடலூா் மாவட்டம் காட்டுமயிலூா், கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 70 மி.மீ., சேலம் மாவட்டம் மேட்டூரில் 50 மி.மீ. பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை : கேரளம், லட்சத்தீவு, குமரிக்கடல் பகுதி, மன்னாா் வளைகுடா, இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் மே 13, 14, 15 ஆகிய மூன்று நாள்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.