தமிழைப் பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

உயர்நீதிமன்றங்களில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். 
சென்னை பல்கலைக் கழகத்தின் 164 வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர். என். ரவி
சென்னை பல்கலைக் கழகத்தின் 164 வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர். என். ரவி
Published on
Updated on
1 min read

உயர்நீதிமன்றங்களில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். 

சென்னை பல்கலைக் கழகத்தின் 164 வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர். என். ரவி கலந்துகொண்டார்.

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர் உரையாற்றிய அவர், பிரதமர் மோடி கூறியது போன்று உலகின் தொன்மையான மொழி தமிழ்தான். தமிழ் மொழியில் இலக்கணமும், இலக்கியமும் மிகவும் பழமை வாய்ந்தது.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ் மொழி பல பெருமைகளைக் கொண்டுள்ளதால், பிற மாநிலங்களிலும் தமிழ் மொழியை பரப்ப வேண்டும். 

மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வேன். முதல்வர் பேரவையில் அறிவித்தபடி தமிழர்கள் 4,500 ஆண்டுகள் முன்பே இரும்பின் பயன்பாட்டை அறிந்திருந்தனர் என்று குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com