காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சென்னையில் அத்துமீறிய 8 கல்லூரி மாணவர்கள் கைது

சென்னையில் அத்துமீறி நடந்து கொண்ட 8 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News image
Updated On :18 மே 2022, 2:45 am

DIN

சென்னையில் அத்துமீறி நடந்து கொண்ட 8 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை மாநகரப் பேருந்து, புறநகர் மின்சார ரயில், கல்லூரி அமைந்துள்ள சாலைகளில் தொடர்ந்து ஆயுதங்களுடன் மாணவர்கள் சண்டையிட்டு வந்த நிலையில், இனி அத்துமீறி நடந்து கொள்ளும் மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், பூந்தமல்லி ரூட் தல, திருத்தணி ரயில் ரூட் தல, நடத்துநரை திங்கள்கிழமை கல்லால் அடித்த 3 மாணவர்கள், கல்லூரி விழாவில் கலந்து கொள்வதில் ஆயுதங்களுடன் பிரச்னையில் ஈடுபட்ட 3 மாணவர்கள் என மொத்தம் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கைது செய்து சிறையில் அடைந்தனர்.

இதுவரை அத்துமீறி நடந்து கொள்ளும் மாணவர்களை எச்சரித்து அனுப்பிய காவல்துறையினர், கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.