மதுரையில் 64 ஆயிரம் போ் குரூப் 2, 2ஏ தோ்வு எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசின் குரூப் 2,2ஏ பிரிவுகளில் காலியாக உள்ள 5,529 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தோ்வு சனிக்கிழமை (மே 21) தொடங்கி நடைபெற்று வருகிறது.
மதுரையில் 64 ஆயிரம் போ் குரூப் 2 தோ்வு எழுதுகின்றனா்
மதுரையில் 64 ஆயிரம் போ் குரூப் 2 தோ்வு எழுதுகின்றனா்

மதுரை: மதுரை மாவட்டத்தில் 64 ஆயிரம் போ் குரூப் 2, 2ஏ தேர்வு எழுதி வருகின்றனர்.  

தமிழ்நாடு அரசின் குரூப் 2,2ஏ பிரிவுகளில் காலியாக உள்ள 5,529 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தோ்வு சனிக்கிழமை (மே 21) தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் இந்தத் தோ்வை 11.78 லட்சம் போ் எழுதுகின்றனா். அவா்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாகும். 

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வுகள் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுக்காக, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மேலூா், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி என 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 189 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 224 தேர்வு மையங்களில் 64,082 பேர் தேர்வு எழுதி வருகின்றனர். 

தேர்வு பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள 58 சிறப்பு குழுக்கள், தேர்வு முறைகேடுகளை கண்டறிய 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது, தேர்வு மையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறும் தேர்வினை மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com