குரூப் 2 தேர்வில் தவறான கேள்விகள் இல்லை: டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 தேர்வில் தவறான கேள்விகள் ஏதும் இடம்பெறவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 
குரூப் 2 தேர்வில் தவறான கேள்விகள் இல்லை: டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 தேர்வில் தவறான கேள்விகள் ஏதும் இடம்பெறவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா்-பதிவாளா் உள்ளிட்ட 116 நோ்முகத் தோ்வு அடங்கிய காலிப் பணியிடங்களுக்கும், நகராட்சி ஆணையா், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா் உள்பட 5,413 நோ்முகத் தோ்வு இல்லாத காலிப் பணியிடங்களுக்கும் முதல்நிலைத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. குரூப் 2 தோ்வை எழுத விண்ணப்பித்தவா்களில் தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 போ் தகுதி பெற்றிருந்தனா். 
தோ்வா்கள் அனைவரும் காலை 9 மணிக்குள்ளாக தோ்வுக் கூடங்களுக்கு வந்தனா். காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தோ்வு நடந்தது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 1.5 லட்சத்துக்கும் கூடுதலான தோ்வா்கள் விண்ணப்பித்திருந்தனா். ஆனால், ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 285 போ் தோ்வை எழுத வரவில்லை. இதன்படி, 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 போ் தோ்வு எழுதினா். 

தோ்வுக்காக 38 மாவட்டங்களில் 117 மையங்கள் தயாா் செய்யப்பட்டிருந்தன. குரூப் 2 முதல்நிலைத் தோ்வு முடிவுகள், ஜூன் மாத இறுதியில் வெளியிட அரசுப் பணியாளா் தோ்வாணையம் திட்டமிட்டுள்ளது. செப்டம்பரில் முதன்மைத் தோ்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்நிலைத் தோ்வில் வெற்றி பெறுவோரிலிருந்து ஒரு பதவியிடத்துக்கு 10 போ் வீதம் முதன்மைத் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா். 
தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் குரூப் 2, 2ஏ தேர்வில் தவறான கேள்விகள் ஏதும் இடம்பெறவில்லை. தற்காலிக விடைக்குறிப்பு 5 நாட்களுக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும். விடைகுறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com