மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

அண்ணா பல்கலை.யில் 6 மாணவர்களுக்கு கரோனா

சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

அண்ணா பல்கலைக்கழகம்

Updated On :24 மே 2022, 6:23 am

சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த மாணவா்களால் கடந்த சில நாள்களுக்கு முன்னா் கரோனா பரவியது. இதையடுத்து ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள விடுதிகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள மாணவா்கள், பேராசிரியா்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவில் 198 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் 6 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்களுடன் தொடா்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில்,

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கு கரோனா அறிகுறிகள் ஏற்பட்டன. இதையடுத்து அவா்களுடன் தொடா்பில் இருந்த 40 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த 6 பேருக்கும் லேசான அறிகுறி இருப்பதால் பல்கலைக்கழக வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.