சென்னை: ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியதையடுத்து, தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்றவர்களை உரிய முறையில் பரிசோதனை செய்ய மாவட்ட மருத்துவ அலுவலர்களுடன் இணைந்து, நோய் பரவாமல் விழிப்புடன் இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தனது சுற்றறிக்கையில், குழந்தைகள் உள்பட மக்களின் உடலில் விவரிக்க முடியாத தடிப்பு ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருக்குமாறு ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் உள்ளவர்களை சுகாதார மையங்களில் தெரிவிக்குமாறு மாநில சுகாதார செயலாளர் மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ரத்தம், சளி, மற்றும் வெசிகல்ஸ் திரவம் அடங்கிய ஆய்வக மாதிரிகளை தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்புமாறு மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜெய்ப்பூரில் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் சடலமாக மீட்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


