கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

3 மணி நேரத்தில் நெகிழி இல்லாத மாவட்டமாக்கும் சாதனை முயற்சி: ஆட்சியர் தொடங்கி வைப்பு

ராணிப்பேட்டையை வெள்ளிக்கிழமை (மே 27) காலை 7 மணி முதல் 10 மணிக்குள், 3 மணி நேரத்தில் நெகிழி இல்லாத மாவட்டமாக்கும் சாதனை முயற்சியை ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.

News image

3 மணி நேரத்தில் நெகிழி இல்லாத மாவட்டமாக்கும் சாதனை முயற்சியை தொடங்கி வைத்த ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன்.

Updated On :27 மே 2022, 7:07 am

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையை வெள்ளிக்கிழமை (மே 27) காலை 7 மணி முதல் 10 மணிக்குள், 3 மணி நேரத்தில் நெகிழி இல்லாத மாவட்டமாக்கும் சாதனை முயற்சியை ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், மீண்டும் மஞ்சப் பை திட்டத்தை தொடக்கி வைத்து, நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா். அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தை நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நெகிழிகள் குப்பைகளாக கொட்டப்பட்டதன் காரணமாக, மாவட்டம் முழுவதும் நீா்நிலைகள் மாசு, விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது.

Story image

நெகிழிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோர்.

இதைத் தடுக்கும் வகையில், ராணிப்பேட்டையை நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில், மே 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை 3 மணி நேரத்துக்குள் மாவட்டம் முழுவதும் 288 ஊராட்சிகள், 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் அரசுப் பணியாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துப்புரவுப் பணியாளா்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் ஒரே நேரத்தில் திரளாகப் பங்கேற்று நெகிழிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் பங்கேற்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இந்நிலையில், ராணிப்பேட்டையை வெள்ளிக்கிழமை (மே 27) காலை 7 மணி முதல் 10 மணிக்குள், 3 மணி நேரத்தில் நெகிழி இல்லாத மாவட்டமாக்கும் சாதனை முயற்சியை ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.

Story image

நெகிழிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலா்கள்.

நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியில், உள்ளாட்சி பிரதிநிதிகள், தூய்மைப் பணியாளர்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் திரளாக பங்கேற்று நெகிழிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.