எழும்பூர் அன்று போல் இன்று இல்லை.. கைகோர்த்த ரயில்வே-மாநகராட்சி

எழும்பூர் ரயில் நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணியால் நிலைமை மேம்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே மேலாளரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் அன்று போல் இன்று இல்லை.. கைகோர்த்த ரயில்வே-மாநகராட்சி
எழும்பூர் அன்று போல் இன்று இல்லை.. கைகோர்த்த ரயில்வே-மாநகராட்சி
Updated on
1 min read

எழும்பூர் ரயில் நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணியால் நிலைமை மேம்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே மேலாளரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளப் பகுதிகளில் மழை நீர் தேங்கி ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுவது தொடர் கதையாக இருந்து வந்த நிலையில், சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்தும் தண்டவாளங்களில் எந்த பாதிப்பும் இல்லை.

இது குறித்து சுட்டுரையில் விடியோவுடன் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஓராண்டாக எழும்பூர் ரயில் நிலையம் பகுதியில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக நிலைமை மேம்பட்டுள்ளது.

இதனால், தண்டவாளப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல், வழக்கம் போல, ரயில்கள் அனைத்தும் அதன் வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதுபோன்று, ஒன்றிணைந்து இதர ரயில் நிலையங்களிலும் பணியாற்றுவோம் என்று நம்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி சென்னை மாநகராட்சி. இதுபோல தண்ணீர் தேங்கும் பிரச்னை இருக்கும் ரயில் நிலையங்களிலும் ஒன்றிணைந்து செயல்பட்டு விரைவில் தீர்வு காண வேண்டும், மழைக்காலங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

இந்த திட்டப் பணியில், நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து உதவி செய்திருக்கிறது. அவர்களுக்கும் நன்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com