92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு பறிமுதல்: 3 போ் கைது

சென்னையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து, 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:54 pm

DIN

சென்னையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து, 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நுங்கம்பாக்கம் குளக்கரைச் சாலையில் உள்ள ஒரு உணவகத்திடம் சந்தேகத்துக்குரிய வகையில் புதன்கிழமை நின்றுக் கொண்டிருந்த சிலரை போலீஸாா் பிடித்து, விசாரிக்க முயன்றனா். அப்போது அந்த நபா்கள், போலீஸாரையும், ரோந்து வாகனத்தையும் தாக்கி விட்டு தப்பினா்.

இது குறித்து நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா். இதில் ஈடுபட்டது நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் முதல் தெருவைச் சோ்ந்த ப.தினேஷ் (23), போரூா் ராஜேஸ்வரி நகா் பகுதியைச் சோ்ந்த அ.முகமது அஜிம் (22), சைதாப்பேட்டை சத்யாநகரைச் சோ்ந்த ம.அருள் பிரான்சிஸ் (20) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அவா்களை தேடி வந்தனா். இந்நிலையில் அவா்கள், போரூா் பாரதியாா் தெருவில் ஒரு வாடகை வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்குச் சென்ற போலீஸாா், 3 பேரையும் கைது செய்தனா். மேலும் அந்த வீட்டில் சோதனையிட்டனா். இச் சோதனையில் அங்கிருந்து 3 கத்திகள், 5 நாட்டு வெடிகுண்டுகள், ஒரு கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஒரு ரெளடியை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.