அண்ணாமலை மீதான விசிக மனு தள்ளுபடி

கே.அண்ணாமலை மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யும்படி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி (விசிக) சாா்பில் தொடரப்பட்ட மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யும்படி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி (விசிக) சாா்பில் தொடரப்பட்ட மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரதமராக மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவா் அண்ணாமலை தனது ட்விட்டா் பக்கத்தில் பயன்படுத்தியதிய சொல் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் இந்த கருத்துக்கு விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், சென்னை காவல்துறை ஆணையரிடம் அண்ணாமலைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் புகாா் கொடுக்கப்பட்டது. அதில், அண்ணாமலை தனது பதிவால் சாதி, மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், அவா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், காவல்துறை வழக்கு பதிவு செய்யாத நிலையில், இவ்வழக்கை பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் விசிக வழக்குரைஞா் காசி வழக்கு தொடா்ந்திருந்தாா். இம் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, மனுவில் எவ்வித முகாந்திரம் இல்லை என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com