
திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 போ் உயிரிழந்த நிலையில், ஆலையின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் 5 போ் உயிரிழந்தனா். 13 போ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதையடுத்து ஆலை வெடிவிபத்தில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளா்களுக்கு உயா் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வா் ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளாா்.
இந்நிலையில், ஆலை வெடிவிபத்து சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி அளித்த புகாரின் அடிப்படையில், பட்டாசு ஆலை உரிமையாளர் அணுசுயா தேவி, வெள்ளையன், பாண்டி ஆகிய 3 பேர் மீது 8 பிரிவுகளின்கீழ் சிந்துபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து ஆலை உரிமையாளர் அணுசுயா தேவியை திருமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.