கோவையில் மின் நிலையத்தின் கதவை உடைத்துக்கொண்டு காட்டு யானைகள் உள்ளே புகுந்ததை கண்ட மின்நிலைய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்ததால் 6 யானைகளின் உயிரிகள் காப்பாற்றப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மருதமலை வனப்பகுதி அமைந்துள்ளது. யானைகள் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த வனப் பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். தற்போது யானைகளின் வலசை காலம் தொடங்கியுள்ளதால் கேரள வனப் பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் தடாகம், மருதமலை வனப் பகுதிக்குள் வந்துள்ளன.
இந்நிலையில், சம்பவத்தன்று மருதமலை வனப் பகுதியில் இருந்து 8 யானைகள் கூட்டம் வனப் பகுதியில் இருந்து வெளியேறி மின் நிலையத்திற்குள் புகுந்தன. அதில், 6 யானைகள் கோவை அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்குள் புகுந்தது. பின்னர் அங்கும் இங்கும் சுற்றிய யானைகள் திடீரென அருகே இருந்த துணை மின் நிலையத்தின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தன. யானைகள் உள்ளே வருவதை கண்ட லைன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் கேங்மேன் மணிமாறன் ஆகியோர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
மின் இணைப்பு துண்டிப்பு: உடனே, அவர்கள் மின் இணைப்பை துண்டிக்குமாறு அறிவுறுத்தவே, உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர்.
மேலும், ஊழியர்கள் யானைகளை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு காட்டு யானைகளை மருதமலை வனப் பகுதிக்குள் விரட்டினர்.
மின்சார வாரிய ஊழியர்களின் துரித நடவடிக்கையால் 6 யானைகளின் உயிரை காப்பாற்றப்பட்டதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மக்கள் கைவிடமாட்டாா்கள்: வேட்பு மனு தாக்கலுக்கு பின்னா் அருள் எம்எல்ஏ பேட்டி

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக கட்சியினா் போா்க்கொடி

பாலியல் புகாா் வழக்கு: இயக்குநா் ரஞ்சித்துக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

‘இளைஞா்களின் ஆதரவு தவெகவுக்கு உள்ளது’
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


