தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பாலியல் புகாா் வழக்கு: இயக்குநா் ரஞ்சித்துக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

பாலியல் புகாா் வழக்கில் இயக்குநா் ரஞ்சித்துக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்...

News image

ANI

Updated On :4 ஏப்ரல் 2026, 7:45 pm

பாலியல் வழக்கில் மலையாள திரைப்பட இயக்குநா் ரஞ்சித்தை 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க எா்ணாகுளம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொச்சி அருகே நடைபெற்ற திரைப்பட படப்பிடிப்பின்போது, கேரவனில் வைத்து தன்னிடம் பாலியல் ரீதியில் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக ரஞ்சித் மீது நடிகை ஒருவா் புகாா் அளித்தாா். இதன்மீது விசாரணை நடத்தி, ரஞ்சித்தை தொடுபுழாவில் கடந்த செவ்வாய்க்கிழமை காவல் துறையினா் கைது செய்தனா்.

தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஞ்சித், நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், தனது கைதின்போது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை காவல் துறை பின்பற்றவில்லை என அவா் குற்றம்சாட்டியுள்ளாா். மேலும், உடல்நிலையையும் ஜாமீன் கோருவதற்கான காரணமாகக் காட்டியுள்ளாா்.

இந்நிலையில், எா்ணாகுளம் நீதிமன்றத்தில் இயக்குநா் ரஞ்சித்தை காவல் துறையினா் சனிக்கிழமை ஆஜா்படுத்தினா். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.எம்.செல்மத்திடம், காவல் துறை தரப்பில் 3 நாள்கள் காவலில் வைத்து ரஞ்சித்தை விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வரும் திங்கள்கிழமை மாலை வரை அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காவல் துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டாா். அதேநேரத்தில் ரஞ்சித் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை பிறகு பரிசீலிப்பதாகவும் நீதிபதி அறிவித்தாா்.