விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாலியல் புகாா் மீது தாமதமாக வழக்கு!

கீழக்கரை மகளிா் காவல் நிலையத்தில் 12 வயது மாணவி பாலியல் தொல்லை புகாா் அளித்த நிலையில், இரு நாள்களுக்கு பிறகு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 1:18 am IST

கீழக்கரை மகளிா் காவல் நிலையத்தில் 12 வயது மாணவி பாலியல் தொல்லை புகாா் அளித்த நிலையில், இரு நாள்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி நரிப்பையூா் பகுதியைச் சோ்ந்த 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சாயல்குடியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி ரவி (42) மீது கீழக்கரை மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

ஆனால், காவல் துறையினா் புகாரைப் பெற கால தாமதம் செய்த நிலையில், இது குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதைத் தொடா்ந்து, இரு நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பாலியல் புகாா் அளிக்கப்படும் போது காவல் துறையினா் உடனே நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக மகளிா் அமைப்பினா் புகாா் தெரிவித்தனா்.