பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித் பாலியல் புகாரால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மலையாள சினிமாவில் கவனிக்கத்தக்க படங்களை இயக்கியவர் ரஞ்சித். திரை எழுத்தாளரான இவர் 2001-ல் மோகன்லாலை வைத்து ராவணபிரபு என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநரானார். முதல் படமே 100 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை வசூலைச் செய்தது.
தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியதுடன் தயாரிப்பு, திரைக்கதை எழுதுவது என மலையாள சினிமாவுக்கு பெரிய பங்களிப்பை அளித்து வந்தார்.
ஆனால், ரஞ்சித் மீது அடிக்கடி பாலியல் குற்றச்சாட்டுகளும் எழுந்துகொண்டே இருந்தன. ஹேமா கமிட்டி அறிக்கையிலும் சில நடிகைகள் ரஞ்சித் பெயரைப் பதிவு செய்துள்ளனர். மேலும், கடந்த 2024 ஆண்டு வங்க நடிகையொருவர் ரஞ்சித் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறியது சர்ச்சையானது.
தற்போது, ரஞ்சித் இயக்கிக்கொண்டிருக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது கேரவேனுக்குள் வைத்து நடிகையொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் நடிகை புகார் அளித்த நிலையில், ரகசிய விசாரணையில் சம்பவம் நடந்திருப்பதை உறுதிசெய்த காவல்துறை ரஞ்சித்தைக் கைது செய்தனர். மேலும், 14 நாள்கள் விசாரணை செய்ய நீதிபதி உத்தரவிட்டதால் உடனடியாக அவரை எர்ணாகுளம் சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் மலையாளத் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
director ranjith arrested for sexual abuse to actor
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்!

பாலியல் குற்றச்சாட்டு! இயக்குநர் ரஞ்சித் ஜாமீனில் விடுவிப்பு!

பாலியல் புகாா் வழக்கு: இயக்குநா் ரஞ்சித்துக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

நானும் பா. இரஞ்சித்தும் பரம்பரை எதிரிகளா? வைரலாகும் மோகன். ஜி பதிவு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


