யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நூலகங்களை புதுப்பிக்க ரூ. 84 கோடி நிதி: அரசாணை வெளியீடு!

தமிழகம் முழுவதும் 3,808 நூலகங்களை சீரமைக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கி அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :15 நவம்பர் 2022, 7:22 am

DIN

தமிழகம் முழுவதும் 3,808 நூலகங்களை சீரமைக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கி அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதுமுள்ள 3,808 நூலகங்களை சீரமைக்கவும், நூலகங்களுக்குத் தேவையான புதிய புத்தகங்கள், தளவாடப் பொருட்கள் வாங்கவும் ரூ.84 கோடி நிதி வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 

இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 2021-22 ஆம் ஆண்டில் 4,116 நூலகங்களை சீரமைக்க ரூ.91.75 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் நடப்பு ஆண்டில் 3,808 நூலகங்களை சீரமைத்து புதுப்பிக்க ரூ.84.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. 

மீதமுள்ள நூலகங்கள்  2024 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.