தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில், அதன் உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராகப் பணியாற்றிய ஓய்வு பெற்ற நீதிபதி எம். தணிகாசலம் மற்றும் உறுப்பினர்கள், தங்களது பதவி விலகல் கடிதங்களை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களது பதவி விலகலை ஏற்று, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், உறுப்பினர்களாக ச. கருத்தையாபாண்டியன், இ.ஆ.ப., (ஓய்வு); மு. ஜெயராமன், இ.ஆ.ப., (ஓய்வு); இரா. சுடலைக்கண்ணன், இ.ஆ.ப., (ஓய்வு); கே. மேக்ராஜ், இ.ஆ.ப., (ஓய்வு); மருத்துவர் முனைவர் பெரு. மதியழகன், முன்னாள் பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் முனைவர் எஸ்.பி. சரவணன், முதல்வர், கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி, முத்தூர், திருப்பூர் மாவட்டம் ஆகியோர்களை நியமனம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிக்க | நவ. 19 (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகள் செயல்படும்: தமிழக அரசு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தில்லி காவல் துறையில் அதிரடி உயா்நிலை மாற்றம்!
மளிகை கடை உரிமையாளரிடம் ரூ.17 லட்சம் மோசடி: மூவா் கைது

ஹோலிப் பண்டிகை: இன்று தில்லியில் மதுபானக் கடைகள் திறந்திருக்கும்; அதிகாரிகள் தகவல்

தில்லியில் இணைய வழி கிரிக்கெட் சூதாட்ட மோசடி: 4 போ் கைது
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

