ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது.

News image
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
Updated On :17 நவம்பர் 2022, 3:23 am

DIN

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. மழை குறைந்ததால் கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால்  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 21,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 17,500 கன அடியாகவும் இன்று காலை வினாடிக்கு 15,500 கன அடியாகவும் சரிந்தது.

நீர் வரத்து சரிந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியிலிருந்து வினாடிக்கு 15,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 37- வது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது. அணையின்  நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.