சம்பா நெற்பயிர் காப்பீடு: இறுதிநாள் வரை 9 லட்சம் விவசாயிகள் பதிவு

தமிழகத்தில் சுமார் 9 லட்சம் விவசாயிகள் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய பதிவு செய்துள்ளனர்.
சம்பா நெற்பயிர் காப்பீடு: இறுதிநாள் வரை 9 லட்சம் விவசாயிகள் பதிவு

தமிழகத்தில் சுமார் 9 லட்சம் விவசாயிகள் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய பதிவு செய்துள்ளனர்.

நடப்பாண்டில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யத் தவறிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவம்பர் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவில் 61,365 ஏக்கரில் 33,258 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர்.

இதற்கு முன்னர் நவம்பர் 15ஆம் தேதி வரை மத்திய அரசு கெடு நிர்ணயித்திருந்தது. விடுபட்ட விவசாயிகளுக்காக கெடுவை நீட்டிக்க வேண்டும் என முதல்வர் கோரியதைத் தொடர்ந்து நவ. 21 வரை கெடு நீட்டிக்கப்பட்டது. 

மொத்த சாகுபடி பரப்பில் காப்பீடு செய்வதற்காக மத்திய அரசு நிர்ணயித்துள்ள 50 சதவிகித இலக்கிற்கு தமிழகத்தில் 88 சதவிகிதம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

2021-2022 ஆம் ஆண்டில் இதே கால கட்டத்தில், 20.22 லட்சம் ஏக்கர் பரப்பளவு சுமார் 9.90 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டது.  

2021-2022 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், நடப்பு 2022-2023 ஆம் ஆண்டில் சிறப்புப் பருவத்தில் சுமார் 17 சதவீதம் கூடுதலாக காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னர் நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவான நவம்பர் 15 ஆம் வரை சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரில் பொது சேவை மையங்கள் மூலம் 18.04 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு, சுமார் 8.51 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர்.

காப்பீடு செய்ய நீட்டிக்கப்பட்ட காலமான நவம்பர் 21 வரை விடுபட்ட 33 ஆயிரத்து 258 விவசாயிகளால் 61 ஆயிரத்து 365 ஏக்கர் கூடுதலாக காப்பீடு செய்யப்பட்டு மொத்தம் 18.65 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு 8.84 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர் என தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com