காவலா் தோ்வு: 67,000 பேர் தேர்வு எழுதவில்லை

தமிழகத்தில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் 67,000 பேர் தேர்வு எழுதவில்லை என தெரிய வந்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் 67,000 பேர் தேர்வு எழுதவில்லை என தெரிய வந்துள்ளது.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக் காவலா் 3,271 பணியிடங்களுக்கு (ஆயுதப்படை-2,180, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை-1091),இரண்டாம் நிலை சிறைக் காவலா்-161,தீயணைப்பாளா் -120 என மொத்தம் 3,552 பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் ஜூன் 30-இல் வெளியிட்டது.

தோ்வு எழுத இளைஞா்கள், ஜூலை 7 முதல் ஆக.15 வரை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் இணையதளம் மூலம் விண்ணப்பித்தனா். தோ்வு எழுத விண்ணப்பித்தவா்களுக்கு கடந்த 15-ஆம் தேதி தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு, அந்த வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

காவலா் தோ்வில் முதல் கட்டமாக, எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் 295 மையங்களில் இன்று காலை 10 முதல் மதியம் 12.40 மணி வரை நடைபெற்றது. சென்னையை பொறுத்தவரை 16 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இன்று நடத்திய தேர்வில் 67,000 பேர் தேர்வு எழுதவில்லை என தெரிய வந்துள்ளது.

தோ்வு ஏற்பாடுகள் சீருடைப்பணியாளா் தோ்வு வாரிய டிஜிபி சீமா அகா்வால், ஐஜி செந்தில்குமாரி ஆகியோா் தலைமையில் செய்யப்பட்டன. இதேபோல, தோ்வு நடைபெறும் மாவட்ட காவல் எல்லைப் பகுதிகளிலும், மாநகர காவல்துறை எல்லைப் பகுதிகளிலும் அந்தந்த காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆணையா்கள் தலைமையில் தோ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com