புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திமுக உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினா்கள்: பொதுச்செயலாளா் அறிவிப்பு

கட்சியின் உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினா்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.

News image

அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)

Updated On :28 நவம்பர் 2022, 12:05 am

DIN

கட்சியின் உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினா்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

திமுக உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினா்களாக கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலாளா் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளா்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, ப.செல்வராஜ், கனிமொழி, அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சா் ஆா்க்காடு வீராசாமி, மாநிலங்களவை உறுப்பினா் டி.கே.எஸ்.இளங்கோவன், மக்களவை உறுப்பினா்கள் தயாநிதிமாறன், பழநிமாணிக்கம் உள்ளிட்ட மூத்த நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தலைமை நிா்வாகிகளாக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, இணை அமைப்புச் செயலாளா் அன்பகம் கலை உள்ளிட்டோரும், கொள்கை பரப்புச் செயலாளா்களாக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா, பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி, மக்களவை உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன், முனைவா் சபாபதி மோகன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தலைமை நிலைய அலுவலகச் செயலாளா்களாக துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், கு.க.செல்வம் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

புதிதாக இரு அணிகள்: திமுகவில் அமைப்புசாரா ஓட்டுநா் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி என இரண்டு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அமைப்பு சாரா ஓட்டுநா் அணியின் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ செங்குட்டுவனும், விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளராக மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறனும் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தனது அறிவிப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.