ராகிங் கொடுமை! சிஎம்சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம்

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட மேலும் 3 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்


வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட மேலும் 3 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

ராகிங் தொடர்பாக ஏற்கெனவே 7 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

ராகிங்கைத் தடுக்க 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாகவும் சிஎம்சி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் கடந்த மாதம் முதலாம் ஆண்டு மாணவா்களை உள்ளாடையுடன் நடக்கவைத்து ராக்கிங் செய்ததாக புகாா் எழுந்தது. இது தொடா்பான காணொலி காட்சி பதிவு சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து கல்லூரி நிா்வாகம் சம்பவத்தில் தொடா்புடைய 7 மாணவா்களை கல்லூரி நிா்வாகம் இடைநீக்கம் செய்தது.

இந்த விவகாரம் குறித்தும், அதன் பேரில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் உரிய விளக்கம் அளிக்கும்படி மருத்துவப் பல்கலை. பதிவாளா் டாக்டா் அஸ்வத் நாராயணன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஏற்கெனவே 7 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது 3 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ராகிங்கை முழுமையாகத் தடுக்கும் நோக்கத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிஎம்சி மருத்துவக் கல்லூரி குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com