
மணல் லாரி டயர் வெடித்து, கடை வீதியில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில், பெண் உள்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆசனூர் மணல் குவாரியிலிருந்து மணல் ஏற்றிய லாரி ஒன்று தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தது. நடுக்கடை பகுதியில் வரும்போது திடீரென லாரியின் டயர் வெடித்தது.
இதில் நிலை தடுமாறிய லாரி சாலையோர கடைகள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாலை நடந்து சென்ற பெண் உள்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
ஓட்டுனர் லாரிக்குள் சிக்கினார். அக்கம் பக்கத்தினர், காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தினால் தஞ்சை - அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று மாலை பள்ளி மாணவி மீது மணல் லாரி மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், இன்று மணல் லாரி நிலை தடுமாறி கடைகளுக்குள் புகுந்ததால் ஆறு பேர் காயமடைந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க: ’அந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை’: ஆத்திரமடைந்த யோகி பாபு
எனவே மணல் குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.