பசுமையும் பரதமும் நாட்டிய அஞ்சலி: கல்லணையில் உலக சாதனை நிகழ்ச்சி

கரிகாலச் சோழனை போற்றும் வகையில் தமிழக பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலா துறை   இணைந்து பசுமையும் பாரதமும் நாட்டிய அஞ்சலி ஜெட்லீ உலக சாதனை நிகழ்ச்சி
பசுமையும் பரதமும் நாட்டிய அஞ்சலி: கல்லணையில் உலக சாதனை நிகழ்ச்சி
Published on
Updated on
2 min read


திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கல்லணையை கட்டிய கரிகாலச் சோழனை போற்றும் வகையில் தமிழக பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலா துறை   இணைந்து பசுமையும் பாரதமும் நாட்டிய அஞ்சலி ஜெட்லீ உலக சாதனை நிகழ்ச்சி கல்லணையில் ஞாயிற்றுக்கிழமை (அக் 2) காலை  பிரம்மாண்டமாக நடந்தது.

கல்லணைசுற்றுலா தளங்கள் ஒன்றாகவும் திருச்சி தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் பாலமாகவும் விளங்குகிறது. இந்த கல்லணை கரிகால சோழ பெருவளத்தானால்  2000 ஆண்டுகளுக்கு முன்பு ஓடிய காவிரி ஆற்றின் குறுக்கே  கல், மண், மரம் போன்ற பொருட்களை கொண்டு கட்டப்பட்டதாகும்.

நவீன வசதிகள் இல்லாத காலத்தில் கட்டப்பட்ட கல்லணை இன்றும் தமிழர்கள் மற்றும் சோழர்களின் பெருமையை பறைசாற்றுகிறது. இது தமிழகத்திற்கு மட்டுமல்லாது நம் நாட்டிற்கு மிகப்பெரிய பெருமையாகும்.

இந்த நிலையில் சோழ அரசர்களில் ராஜராஜ சோழன் பெருமைகள் மட்டுமே உலக அளவில் பறைசாற்றப்பட்டு வருகிறது. ஆனால் கரிகால சோழனின் பெருமைகளை யாரும் கண்டு கொள்வது இல்லை. உலகில் முதன் முதலில் அணை கட்டி பெருமையை சேர்த்த கரிகாலசோழ பெருவளத்தானை  நினைவு கூறும் வகையில் கரிகால சோழன் கட்டிய கல்லணையில் தமிழக பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத் துறையும் இணைந்து கல்லணையில் பசுமையும் பாரதமும் நாட்டியாஞ்சலி மற்றும் ஜெட்லி உலக சாதனை  நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதனை தஞ்சை மாவட்ட மேயர் சண்.ராமநாதன் திருச்சி மாவட்ட மேயர் எம்.அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இறைவனும் இயற்கையும் ஒன்று என்பார்கள். ஆனால் நாட்டிய கலைஞர்கள் பெரும்பாலும் இறைவனை  போற்றும் வகையில் நாட்டிய அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

ஆனால், கல்லணையில் நடந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில்  இயற்கையான காவிரி தாய், கரிகால சோழனின் பெருமை,  விவசாயம் ஆகிய மூன்று பெருமைகளை போற்றும் வகையில் இசைக்கப்பட்ட மூன்று பாடல்களுக்கு 1000 நாட்டிய கலைஞர்கள் தன் நாட்டியம் ஆடி இயற்கைக்கு பெருமை சேர்த்ததோடு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

இந்த நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள 60 நாட்டிய பள்ளிகளை சேர்ந்த 1000 பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சிவசக்தி அக்கடாமி நிறுவனர் மீனா சுரேஷ்வர வேற்றார்.

தஞ்சை ஆடல்வல்லான் காஞ்சனாதேவி, காவேரி கலை அரண் அரகட்டளை வஜ்ரவேல் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.  நாட்டியாஞ்சலி விழாவில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு சீல்டு மற்றும் உலக சாதனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும் இதில் கலந்து கொண்ட மாணவிகளிடமிருந்து தல ரூ1500 விதம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கட்டணம் வசூலித்தனர். முன்னதாக கல்லணை பாலத்தில் டனா வடிவில் கல்லணை பாலத்தில் மாணவிகள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கல்லணை பாலத்தில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com