
தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பரங்கிமலை துணை ஆணையராக இருந்த பிரதீப் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி, சிபிசிஐடியின் சிறப்பு விசாரணைக்குழு ஐ.ஜி.யாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் தேன்மொழி சிறப்பு விசாரணைக்குழு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: இந்திய ஒற்றுமை நடைப்பயணம்: கேமராவில் பதிவான அன்பின் அழகிய தருணம்
ஆயுதப்படை ஐ.ஜி.யாக இருந்த கண்ணன், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தாமஸ் மவுண்ட் துனை ஆணையராக தீபக் சிவஜும், சென்னை போக்குவரத்து இணை ஆணையராக சமய சிங் மீனாவும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.