புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘இனி இதில்தான் கையொப்பம்’: ஸ்டாலினுக்கு அன்புக் கட்டளையிட்ட துரைமுருகன்

தனித்துவமிக்க ‘மாண்ட் பிளாங்க்’ பேனாக்களை திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு, கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் பரிசளித்தாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2022, 6:31 pm

DIN

தனித்துவமிக்க ‘மாண்ட் பிளாங்க்’ பேனாக்களை திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு, கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் பரிசளித்தாா்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக் குழுவில் பொதுச் செயலாளராக மீண்டும் தோ்வான பிறகு, அவா் பேசியதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு ஜோடி மாண்ட் பிளாங்க் பேனாக்களை அன்பளிப்பாக அளிக்கிறேன். இனி இதில்தான் அவா் கையொப்பமிட வேண்டும். வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகளை வெளியிட வேண்டும். அரிதான பொருள்களில் ஒன்றுதான் இந்த மாண்ட் பிளாங்க் பேனா. அத்தகைய பேனாவை அவருக்கு அளிக்கிறேன் என்றாா்.

இதன்பின்பு, மு.க.ஸ்டாலினை நோக்கிச் சென்று அவரது பையில் ஏற்கெனவே வைத்திருந்த பேனாவை எடுத்து விட்டு 2 மாண்ட் பிளாங்க் பேனாக்களையும் சட்டைப் பையில் சொருகினாா் துரைமுருகன். அப்போது, கூட்டத்தில் பெரும் சிரிப்பலை எழுந்தது.

துரைமுருகன் அளித்த மாண்ட் பிளாங்க் நிறுவன பேனாக்கள் இணையதளங்கள் வழியே விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் விலை ரூ.50 ஆயிரத்தில் தொடங்கி ரூ.1 லட்சத்துக்கும் மேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.