திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார்.
ரூ.350 கோடி செலவில் கட்டப்படும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில், பஸ் டெர்மினஸ், டிரக் டெர்மினல், மல்டி யுடிலிட்டி சென்டர் மற்றும் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளுக்கு தனியாக இடம் ஒதுக்கப்படும்.
திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட மக்கள் சார்பில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பணிகள் இன்னும் 12 மாதங்களில் முடித்து விடுவோம் என்றார்.
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில், திருச்சி மாநகராட்சிக்கு செந்தமான 500 ஏக்கர் நிலத்தில் 75 ஏக்கர் நிலத்தை பயன்படுத்திக் கொள்ளப்படும்.
ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் மொபசல், சிட்டி மற்றும் ஆம்னி பஸ் ஆகியவற்றை நிறுத்த 404 பேக்கள் அமைக்கப்படும் என்றார். ஒரே நேரத்தில் 360 டிரக்குகளை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்படும் இந்த பேருந்து முனையம் எதிர்கால விரிவாக்கத்திற்கு போதுமான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் சுமார் ரூ.2,000 கோடி செலவில் மேம்பாலங்கள் மற்றும் புறவழிச்சாலைகள் அமைக்க ஆலோசனைகள் இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


