நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு! நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வெற்றி!நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு! குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! விஜய் பேச்சுபுஸ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்யும் விஜய்! உதயநிதி கடும் விமர்சனம்! நம்பிக்கை வாக்கெடுப்பு! பேரவைக்கு வராமல் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்தவெகவில் குதிரை பேரம் நடந்தது; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதாநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன் தமிழ்நாட்டை காப்பாற்றும் விஜய் என்னை காப்பாற்ற மாட்டாரா?எம்.எல்.ஏ. காமராஜ் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15% ஆக உயர்வு!தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு காங்கிரஸ், சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆதரவு!முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்!
/

தொடர் மழை: மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப வாய்ப்பு!

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 20,626 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image

மேட்டூர் அணை (கோப்புப்படம்)

Updated On :11 அக்டோபர் 2022, 9:04 am IST

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 20,626 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும்  நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,644 கன அடியாக சரிந்தது. இரவு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 20,626கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 900 கன அடியிலிருந்து வினாடிக்கு 750கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.71 அடியிலிருந்து 119.40 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 92.51 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று மாலை மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. 

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை நெருங்குவதால் நீர்வளத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.