நாட்டில் புதிதாக 2,678 பேருக்கு கரோனா!

நாட்டில் புதிதாக 2,678 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 10 பேர் உயிரிழந்துள்ளனர். 
நாட்டில் புதிதாக 2,678 பேருக்கு கரோனா!

நாட்டில் புதிதாக 2,678 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், நாட்டில் புதிதாக 2,678 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,23,997 ஆக உள்ளது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 10 இறந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,28,857 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 26,583 ஆகக் குறைந்துள்ளது. 

நாட்டில்  இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,68,557 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98% ஆக அதிகரித்துள்ளது. வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் தற்போது 1% ஆக உள்ளது

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,19,21,33,244 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 5,93,963 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com