கும்மிடிப்பூண்டியில் மாவட்ட அளவிலான சாலை மிதிவண்டி போட்டி

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள மகிந்திரா சிட்டி வளாகத்தில் மாவட்ட அளவிலான சாலை மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியில் மாவட்ட அளவிலான சாலை மிதிவண்டி போட்டி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள மகிந்திரா சிட்டி வளாகத்தில் மாவட்ட அளவிலான சாலை மிதிவண்டி போட்டி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட உடற்கல்வி துறை சார்பில் நடைபெற்ற இந்த மிதிவண்டி போட்டியில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 21பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் 14,17,19 வயதிற்குட்பட்டோர்  பிரிவில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியாக 6 போட்டிகள் நடத்தப்பட்டது. 5கி.மீ தொலைவு நடந்த இந்த போட்டிகளை கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி துவக்கி வைத்தார். நிகழ்வில் பெருவாயல் ஊராட்சி தலைவர் ராஜசேகர், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், தொழிலதிபர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர்.

இதில் 14 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் பாலவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் திலீப்குமார் முதலிடத்தையும், திருவொற்றியூர் வெள்ளயஞ்செட்டி பள்ளி மாணவர் இனியவன் இரண்டாம் இடத்தையும், ஆவடி ஜெ.ஜி.வி.வி பள்ளி மாணவர் பூபதி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

அவ்வாறே பெண்களுக்கான 14 வயதிற்குட்போர் பிரிவில் பாலவாக்கம் அரசுi மேல்நிலைப்பள்ளி மாணவி சிவரஞ்சனி முதல் இடத்தையும், அம்பத்தூர் சேதுபாஸ்கரா பள்ளி மாணவி சௌந்தர்யா இரண்டாம் இடத்தையும், பாலவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பிரமிளா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

17 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் அம்பத்தூர் எஸ்.ஆர்.எம் பள்ளி மாணவர் திருமுத்தழகன் முதல் இடத்தையும், பூந்தமல்லி சுந்தர் மெட்ரிக் பள்ளி மாணவர் சீனிவாசன் இரண்டாம் இடத்தையும், அம்பத்தூர் சேது பாஸ்கரா பள்ளி மாணவர் ஸ்ரீவத்சன் மூன்றாம் இடத்தையும் பிடித்தார்.

17வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் பாலவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அர்ச்சனா முதல்  இடத்தையும், கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சாதனா இரண்டாம் இடத்தையும், ஆவடி ஜெ.ஜி.வி.வி பள்ளி மாணவி மகாஸ்ரீ மூன்றாம் இடத்தையும் பிடித்தார்.

19 வயதிற்குட்பட்டோர் பிரிவில்  அம்பத்தூர் சேது பாஸ்கரா பள்ளி மாணவர் ஸ்டீவ்லீசேன்ட்ரோ முதல் இடத்தையும், அம்பத்தூர் எஸ்.ஆர்.எம் பள்ளி மாணவர் டேனியல் சாம்ராஜ் இரண்டாம் இடத்தையும், ஆவடி  விவேகானந்தா பள்ளி மாணவர் சந்தோஷ் குமார் மூன்றாம் இடத்தையும் பிடித்தார்.

19 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நர்மதா முதல் இடத்தையும், அம்பத்தூர் எஸ்.ஆர்.எம் பள்ளி மாணவி வினோதா இரண்டாம் இடத்தையும், அம்பத்தூர் சேது பாஸ்கரா பள்ளி மாணவி கவிதா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

இதில் முதல் இடத்தை பிடித்த 3 மாணவர்கள், 3 மாணவிகள் மாநில அளவிலான மிதிவண்டி போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

இந்த போட்டிளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நரசிம்மராவ் மேற்பார்வையில், ஒருங்கிணைப்பாளர்கள் தெய்வசிகாமணி, ரகுபதி, குப்பன், கர்ணா, மாதவராஜ், தியாகு, சிவா, நாகராஜ் முன்னின்று மகேந்திரா சிட்டி நிர்வாகிளோடு இணைந்து சிறப்பாக நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com