உண்மையான பிரச்னைகளுக்கு பிரதமர் எப்போது தீர்வு காண்பார்? ப.சிதம்பரம் கேள்வி

உண்மையான பிரச்னைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போது தீர்வு காண்பார் என்று ப.சிதம்பரம் கேள்வி எழப்பியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

உண்மையான பிரச்னைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போது தீர்வு காண்பார் என்று ப.சிதம்பரம் கேள்வி எழப்பியுள்ளார்.

ப.சிதம்பரம் தன்னுடைய சுட்டுரை பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் 22.4 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது. இதில் இந்தியாவின் இடம் 121 நாடுகளில் 107 ஆக உள்ளது.

பிரதமர் மோடி எப்போது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி மற்றும் வளர்ச்சி குன்றிய நிலை போன்ற உண்மையான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்.

2014-ல் மோடி அரசு ஆட்சி அமைத்ததில் இருந்தே இந்தியா,  பட்டினிக் குறியீட்டில் கடைசி இடத்தில் உள்ளது. 

மொத்த இந்தியர்களில் 16.3% பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள். ஏனெனில் அவர்களுக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை.

19.3% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35.5% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும் உள்ளனர். இந்துத்துவா, இந்தியை திணிப்பது, வெறுப்பை பரப்புவது ஆகியவை பட்டினிக்கு மருந்து ஆகாது என்று ப.சிதம்பரம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com