மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 6-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளில் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக கடந்த 12 ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,95,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,95,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1, 73,500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆக உள்ளது.
இதையும் படிக்க: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். கட்டணம் உயர்வு
நேற்று இரவு மேட்டூர் பகுதியில் 48.40 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கதாபாத்திர தேர்வில் அசத்தும் ரேச்சல் ரெபெக்கா!

Akira And FIFA! Anime மற்றும் Games குறித்த
ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!
பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

