கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

14 ஆண்டுகளுக்கு பின் 71 அடியை எட்டிய வைகை அணை

தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் வைகை அணை 71 அடியை எட்டியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :22 அக்டோபர் 2022, 12:55 pm

DIN

தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் வைகை அணை 71 அடியை எட்டியுள்ளது.

தேனி மாவட்டப் பகுதிகள், மூல வைகை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து பெய்து வரும் மழை, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் ஆகியவற்றால் வைகை அணையின் நீா்மட்டம்  71 அடியை எட்டியுள்ளது.

2008-ல் வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டிய நிலையில், 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் 71 அடியை எட்டியுள்ளது. இது வரலாற்றிலேயே ஆறாவது முறையாக நிரம்பியுள்ளது.

அணையில் இருந்து 1,817 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


ஆற்றில் குளிக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என பொதுப்பணித் துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.