தமிழ்நாட்டில் தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் எப்போது? அன்புமணி கேள்வி

ஒடிசாவைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தம் செய்யப்பட நிலையில் தமிழ்நாட்டில் எப்போது? என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 
அன்புமணி
அன்புமணி
Published on
Updated on
1 min read

ஒடிசாவைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தம் செய்யப்பட நிலையில் தமிழ்நாட்டில் எப்போது? என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில், ராஜஸ்தான் அரசில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் 1,10,279 ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ளனர். அதற்கான விதிகளுக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். இது வரலாற்று சிறப்பு மிக்க சமூகநீதி நடவடிக்கை ஆகும்.

இனிவரும் காலங்களில் தற்காலிக ஊழியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு; நிரந்தர பணியாளர்களின் ஊதியத்தை கணக்கிட்டு, ஊதியம் நிர்ணயிக்கப்படும்; 5 ஆண்டுகளில் பணி நிரந்தரமும், பழைய ஓய்வூதியமும் வழங்கப்படும்  என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.

ஒடிசாவில் 57,000 தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் பணி நிரந்தரம் குறித்த தேர்தல் வாக்குறுதி  நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள சுமார் 1 லட்சம் தற்காலிக பணியாளர்கள் தங்களுக்கான சமூக நீதியை எதிர்பார்க்கின்றனர்.

தற்காலிக பணியாளர்களை 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணி செய்ய கட்டாயப்படுத்துவது நியாயமல்ல. அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com