பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளையொட்டி, கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் தனது ட்விட்டா் பதிவில்,
கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டியவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில், நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவா்.
இதையும் படிக்க | முத்துராமலிங்கத் தேவருக்கு வெள்ளி கவசம்: ஓபிஎஸ்
'தென்னகத்து போஸ்', என அன்போடு நினைவுகூரப்படும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும் தியாகத்தையும் நற்பணிகளையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.