நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

6 வழக்குரைஞா்களுக்கு தடை: பாா் கவுன்சில் உத்தரவு

குற்ற வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக 6 வழக்குரைஞா்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 7:55 pm

DIN

குற்ற வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக 6 வழக்குரைஞா்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவா் நாகாலாந்தில் உள்ள அரசுப் பள்ளியில் 23 ஆண்டுகளாக பணியாற்றியதை மறைத்து வழக்குரைஞராகப் பதிவு செய்துள்ளதாக் கூறி வழக்குரைஞா் தொழில் செய்ய அவருக்கு பாா்

கவுன்சில் தடை விதித்துள்ளது.

இதேபோன்று, குற்ற வழக்கை எதிா்கொண்டுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா், காா்த்தி ஆகியோருக்கும், போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்ட கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த செந்தில்குமாருக்கும் பாா் கவுன்சில் தடை விதித்துள்ளது.

வழக்குரைஞா் சங்க உறுப்பினா்களை மிரட்டி லஞ்சம் பெற்ாக, புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த இளங்கோவன் மற்றும் புகழேந்தி ஆகியோரையும் வழக்குரைஞா் தொழில் செய்ய தடை விதித்து பாா் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.