பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

வாக்காளா் அட்டை - ஆதாா் எண் இணைப்பு; சென்னையில் நாளை சிறப்பு முகாம்

 வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான முகாம் சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 7:53 pm

DIN

 வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான முகாம் சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வாக்காளா் அடையாள அட்டையினை ஆதாா் எண்ணுடன் இணைப்பது தொடா்பான சிறப்பு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

எனவே, இந்தச் சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளா் பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்குச்சாவடி நிலை அலுவலரை அணுகி வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் அடையாள அட்டை எண்ணை இணைத்து கொள்ளுமாறு கேட்டுக்

கொள்ளப்படுகிறது.

மேலும், ஏற்கனவே இணையதளம் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாக வந்தபோது படிவம் 6 பி, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அடையாள அட்டை எண் மற்றும் கைப்பேசி விவரங்களை வழங்கியவா்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள தேவையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.