திருவனந்தபுரம்: ஜிஎஸ்டி முறை அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளளதாக தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, நாடு முழுவதும் ஜிஎஸ்டி முறை அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்கும் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், மின்வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது.
வெள்ள பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கான மத்திய அரசின் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் கொள்முதல் செய்ய தமிழ்நாடு தயாராக உள்ளது என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஜினி பற்றி பேசியதற்கு ஆதவ் வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ராம்கி

எல்பிஜி: ஆதார் சரிபார்ப்பு கட்டாயமா? யாருக்கு? - மத்திய அரசு விளக்கம்!

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - தவெக கூட்டணி?

சண்டீகரில் படமாக்கப்படும் ரஜினி - ஷாருக்கான் காட்சி?
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

