
அதிமுக தலைமை அலுவலுகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் செல்ல ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக அலுவலகம் சென்று வந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகம் செல்லும்போது உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி காவல் துறையினரிடம் மனு அளித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் பாதுகாப்புக் கோரி மனு அளித்துள்ளார்.
அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ் செல்லும்போது அவரை வரவேற்க தொண்டர்கள் கூடும் வாய்ப்பு உள்ளது. ஏரளமான தொண்டர்கள் அதிமுக அலுவலகத்தை கூடுவதை பயன்படுத்தி கலவரம் செய்ய சமூக விரோதிகள் திட்டம் என புகார் எழுந்துள்ளது.
இதையும் படிக்க:
ஓபிஎஸ் மற்றும் நிர்வாகிகள் கட்சி அலுவலகம் செல்ல இடையுறு இல்லாத வகையில் பாதுகாப்பு தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.