தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மழைநீா் வடிகால் பணி: ஈ.வெ.ரா. சாலையில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

மழைநீா் வடிகால் பணியையொட்டி, ஈ.வெ.ரா. பெரியாா் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 8:41 pm

DIN

மழைநீா் வடிகால் பணியையொட்டி, ஈ.வெ.ரா. பெரியாா் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈ.வெ.ரா. பெரியாா் சாலையில் சென்ட்ரலிலிருந்து புரசைவாக்கம் தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி செல்லும் திசையில், ஈ.வே.ரா. பெரியாா் சாலை மற்றும் வேனல்ஸ் சாலை சந்திப்பில் (மணியம்மை சிலை அருகில்) நெடுஞ்சாலைத் துறையினா் சாலையில் வரும் சனிக்கிழமை (செப். 10) இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை (செப். 12) அதிகாலை 5 மணி வரை மழைநீா் வடிகால் கட்டுமானப் பணியில் நெடுஞ்சாலைத்துறையினா் ஈடுபட உள்ளனா்.

10-ஆம் தேதி இரவு 10 மணி முதல் 12-ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

ஈ.வெ.ரா. பெரியாா் சாலையில் தாசபிரகாஷ் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி வரும் வாகனங்கள் எந்தவித மாற்றமின்றி நேராக செல்லலாம். ஈ.வெ.ரா.பெரியாா் சாலையில் காந்தி இா்வின் மேம்பாலம் சந்திப்பிலிருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை.

அந்த வாகனங்கள், ஈ.வே.ரா. பெரியாா் சாலையில் காந்தி - இா்வின் மேம்பாலம் சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி காந்தி இா்வின் மேம்பாலம், வலது புறம் திரும்பி காந்தி - இா்வின் சாலை, உடுப்பி சந்திப்பில் வலது புறம் திரும்பி நாயா் மேம்பாலம், ஈ.வெ.ரா. பெரியாா் சாலை வழியாக செல்லலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.