சசிகலாவை எதேச்சையாக சந்தித்ததாகவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்,.
மன்னார்குடியிலிருந்து தஞ்சை திரும்பும் வழியில் அதிமுகவின் வைத்திலிங்கம், சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
மன்னார்குடியிலிருந்து தஞ்சை திரும்பும் வழியில், தஞ்சாவூர் மாவட்டம் ஓவல்குடியில் யதார்த்தமாக சசிகலாவின் வாகனத்தைப் பார்த்த ஓபிஎஸ் ஆதரவாளரும் எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் தனது வாகனத்திலிருந்து இறங்கி வந்து சசிகலாவிற்கு வணக்கம் தெரிவித்தார். பின்னர் சசிகலா வாகனத்திலிருந்து இறங்கி அவருக்கு வணக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும், வைத்தியலிங்கம் இன்று தனக்கு பிறந்தநாள் என்று சசிகலாவிடம் தெரிவிக்க, சசிகலா இனிப்பு வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிக்க | சசிகலா - வைத்திலிங்கம் பரஸ்பர சந்திப்பு!
சசிகலாவுடன் வைத்தியலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், 'திருமண நிகழ்வுக்காக சென்றபோது எதேச்சையாக சசிகலாவை சந்தித்தேன். எங்களுக்கு ஒற்றுமை தேவை. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இபிஎஸ் எப்படி முதலமைச்சரானார், எப்படி கட்சியை அபகரிக்கத் துடிக்கிறார் என்பது கடைக்கோடி தொண்டனுக்கும் தெரியும். அவரின் ஆணவப் போக்கிற்கு தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். தன்னை காப்பாற்றிக்கொள்ள யாருடனோ ரகசிய உடன்பாடு செய்துகொண்டு கட்சியை அழிக்க நினைக்கிறார்' என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK

"Exit Poll is NOT Exact Poll" தமிழிசை சௌந்தரராஜன் | BJP
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


