காஞ்சிபுரம் அண்ணா நினைவிடத்தில் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் மரியாதை

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.பி. க.செல்வம் மற்றும் எம்எல்ஏக்கள் அண்ணாவின் உருவச்சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன்


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.பி. க.செல்வம் மற்றும் எம்எல்ஏக்கள் அண்ணாவின் உருவச்சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் இருக்கும் அவரது உருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி மாலை அணிவித்து முதலில் மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ. அன்பரசன், எம்.பி. க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக் குழுவின் தலைவர்கள் மலர்க்கொடி குமார், தேவேந்திரன் உள்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அண்ணாவின் இல்லத்தில் இருந்த அவரது அரிய புகைப்படங்களையும் பார்வையிட்டனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம்,முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏக்கள் வாலாஜாபாத் பா.கணேசன்,மைதிலி திருநாவுக்கரசு. காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் தும்பவனம். ஜீவானந்தம் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பலரும் அண்ணாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அங்கு வந்திருந்தவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்கள்.

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவரது இல்லம் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com