மக்கள் பணம் வீணாவதை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றக் கிளை

மக்கள் பணம் வீணாவதை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றக் கிளை

பொதுமக்களின் பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Published on

பொதுமக்களின் பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்பில் விளையாட்டு அரங்கம் கட்ட செலவிடப்பட்ட தொகை எவ்வளவு மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பில் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விருதுநகர் ஆலங்குளம் கண்மாயில் அமைக்கப்பட்ட அம்மா தேசிய விளையாட்டு அரங்கத்தை அகற்றக் கோரிய வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருச்சுழியை சேர்ந்த ரமேஷ் தொடர்ந்த வழக்கில், அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை இரண்டு வாரத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்திவைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் கண்மாயில் தேசிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது தொடர்பாக வழக்கு தொடரபட்டது. இந்நிலையில் பொதுமக்களின் பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com