நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

அக்டோபரில் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி: முதல்வர் தொடக்கி வைக்கிறார்

அக்டோபரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.

News image

கோப்புப்படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

அக்டோபரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பருக்கு பதில் அக்டோபர் முதல் நீட் தேர்வு பயிற்சி தர பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. நீட் நுழைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை அடுத்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்க உள்ளார்.

இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 35% ஆக சரிந்ததால் முன்கூட்டியே நீட் பயிற்சி அளிக்க  பள்ளிக்கல்வித் துறை  முடிவெடுத்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நேரடியாக நீட் தேர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி ஆலுவலகர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தகைசால் பள்ளிகள், காலாண்டுத் தேர்வு மற்றும் நீட் தேர்வுக்கான பயிற்சி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.