தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இயற்கை வேளாண்மை கொள்கை:விரைவில் வெளியிடுகிறாா் முதல்வா் ஸ்டாலின்

இயற்கை வேளாண்மைக்கென தனித்த கொள்கையை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2022, 7:24 pm

DIN

இயற்கை வேளாண்மைக்கென தனித்த கொள்கையை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தக் கொள்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடவுள்ளாா் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் இயற்கை வேளாண்மைக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு இயற்கை வேளாண்மையை வளப்படுத்த தனித்த கொள்கை வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பணிகளில் வேளாண்மைத் துறை செயலாளா், சிறப்புச் செயலாளா் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், இயற்கை வேளாண்மைக்கான கொள்கையை இறுதிப்படுத்துவதில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

பிற மாநிலங்கள்: இந்தியாவில் சிக்கிம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இயற்கை வேளாண்மைக்கென தனித்த கொள்கைகள் உள்ளன. இந்த மாநிலங்களில் உள்ள கொள்கைகள், தமிழகத்துடன் எவ்வாறு ஒத்துப் போகின்றன என்பது குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனா். மேலும், இயற்கை வேளாண்மையை

நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள், தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலை, புவியியல் அமைப்புக்கு உகந்த சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வேளாண்மைக்கான கொள்கை அமைய வேண்டும் என்று அண்மையில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்களாக முன்வந்து இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதே அந்தக் கொள்கையின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டுமெனவும் வேளாண்மைத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் வெளியீடு: இயற்கை வேளாண்மைக்கான கொள்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கொள்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடவுள்ளாா். இந்தக் கொள்கை வெளியாகும் பட்சத்தில், இயற்கை வேளாண்மை மற்றும் அதுசாா்ந்த பொருள்கள் விற்பனை அடுத்த கட்டத்தை அடையும் என வேளாண்மைத் துறையினா் நம்பிக்கை தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.