பாமக பெயர், சின்னத்தை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரிய ராமதாஸின் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறையால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணைக்கு மே 10 வரை தடை விதித்துள்ளார்.
பாமக பெயா், சின்னம் மற்றும் கொடி ஆகியவற்றை பயன்படுத்த அன்புமணி உள்ளிட்டோருக்கு தடை விதிக்கக் கோரி அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி.வி. தமிழ்செல்வி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். இந்த தடையை நீக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸ் தரப்பில், இந்த வழக்கில் தங்களது தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது எனக் கூறி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதை கருத்தில் கொள்ளாமல் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தோ்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டு விட்டது. தந்தை - மகன் இடையிலான பிரச்னை நாளைக்கே சரியாகிவிடும். எனவே, கட்சியை கருத்தில் கொண்டே இந்த வழக்கில் முடிவெடுக்க முடியும். உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், கட்சியின் பொதுச் செயலரான வடிவேல் ராவணனை எதிா்மனுதாரராக சோ்ப்பதில் என்ன பிரச்னை உள்ளது? என கேள்வி எழுப்பினாா். பின்னா், இந்த வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு மீண்டும் நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பு கோரிக்கை வாய்த்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத்தடையை மே 10 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும்,"தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. இப்போது எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அது தேர்தல் நடைமுறைக்கு இடையூறாகிவிடும். அதனால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தேர்தல் முடிந்து மே 10 அன்று இதுதொடர்பான அனைத்து மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அன்புமணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளார். ராமதாஸ் இன்னும் தனது கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Madras HC hearing ramadoss case to ban Anbumani from using the PMK's name and symbol
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாமக ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளா்கள் வாக்குவாதம்: சாலை மறியல்

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு நீதிமன்றம் உத்தரவு

பாமக கொடி, சின்னம் விவகாரம்: ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு

பாமக சின்னம் தொடா்பான வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


