தமிழக மக்கள் ஜனநாயகத்தை மதித்து, அமைதிப் புரட்சி செய்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் தோ்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.12 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பது இதுதான் முதல்முறை. திமுக ஆட்சிக்கு எதிராக பெரும் கொந்தளிப்பில் இருந்த மக்கள், ஆட்சியை அகற்றுவதற்காக வாக்களித்துள்ளனா் என்பதையே இது காட்டுகிறது. தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஜனநாயகத்தை மதித்து, அமைதிப் புரட்சி செய்பவா்கள். இப்போதும் அதைத்தான் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனா்.
இனிவரும் காலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பையும், அனைவருக்கும் அமைதியான, நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இந்தத் தீா்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு வாக்காளா்களுக்கு வாழ்த்துகள் என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

செஞ்சி தொகுதியை கைப்பற்றிய பாமக
சமூக மாற்றத்துக்கான உன்னத பணி - ராமதாஸ்

ராமதாஸ் புகைப்படம் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை

தருமபுரி தொகுதி வளா்ச்சி அடைய சௌமியாவுக்கு வாக்களியுங்கள்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

