கலைஞா் கருணாநிதி அறக்கட்டளை சாா்பில் 8 பேருக்கு கல்வி உதவித் தொகையாக தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து திமுக சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கலைஞா் கருணாநிதி அறக்கட்டளைக்காக கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடி வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டியைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளியோருக்கு 2007-ஆம் ஆண்டு வரை உதவித் தொகையாக வழங்கப்பட்டு வந்தது.
அதில் ரூ.1 கோடி தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள்-பதிப்பாளா்கள் சங்கத்துக்கு வழங்கப்படும் என கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு அது வழங்கப்பட்டது. மீதமுள்ள நான்கு கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையைக் கொண்டு தற்போது உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த மாதத்துக்கான வட்டித் தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினால் ஞாயிற்றுக்கிழமை (செப்.18) வழங்கப்பட்டது. நிதி பெறுவோா் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிா்ப்பதற்காக அஞ்சல் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

