சீரகம், சோம்பிலுமா கலப்படம்? சேலத்தில் பறிமுதல்!

கலப்படம் செய்வதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான சீரகம் மற்றும் சோம்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சீரகம், சோம்பிலுமா கலப்படம்? சேலத்தில் பறிமுதல்!
Published on
Updated on
2 min read

சேலம்: கலப்படம் செய்வதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான சீரகம் மற்றும் சோம்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்  செவ்வாய்பேட்டை அருகே உள்ள சந்தைப்பேட்டையில் இயங்கி வரும் சீரகம், சோம்பு, கடுகு சேமிப்புக் கிடங்கில், அதிக அளவில் மூட்டைகளில் கலப்படம் செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையான உணவு பாதுகாப்பு அலுவலர் அடங்கிய குழு சம்பந்தப்பட்ட கிடங்கில் நுழைந்து ஆய்வு செய்தது. 

அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த  8250 கிலோ சீரகம் மற்றும்  4,180 கிலோ சோம்பு மூட்டைகளில் கலப்படம் செய்வதற்கு தயாராக  வேதி பொருட்கள், செயற்கை வண்ண நிறமிகள்,மாவு பொருட்கள், கலப்படம் செய்து உலர்துவதற்கு வைக்கப்பட்டிருந்த விசிறிகள்,எடை இயந்திரங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதனையடுத்து உண்மையான சீரகம் மற்றும் சோம்பு ஆகியவற்றைக் கொண்டும் ஏற்கனவே கலப்படம் செய்யப்பட்ட சீரகம் மற்றும் சோம்பை கொண்டு கிடங்கின் வளாகத்திலேயே சோதனை மேற்கொண்டனர். 

அப்போது சோம்பு மற்றும் சீரகம் செயற்கையான நிறம் சேர்க்கப்பட்டு கலப்படம் செய்யப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

இதனையடுத்து குடோனில் இருந்த ரூ.8,58 000 மதிப்பிலான 8250 கிலோ  சீரகம்.  ரூ.76,000 மதிப்பிலான 4180 கிலோ சோம்பு  என மொத்தம் ரூ.9,34,000  ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும்  உணவுப் பொருட்களில் இருந்து உணவு மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிடங்கிற்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

ஆய்வகத்தின் அறிக்கை முடிவின்படி,  வணிக நிறுவனரின் மேல் வழக்கு தொடரப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 சேலத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சோம்பு மற்றும் சீரகம் ஆகிய உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com